நீதிக்கதைகள் - ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஒரு பெண் தன்வீட்டில் ஒரு கீரிப்பிள்ளையை அன்புடுன் வளர்த்து வந்தாள். கீரி ஒரு நன்றியுள்ள பிராணி. அந்தப் பெண்ணுக்கு ஒரு பச்சிளங்குழந்தை இருந்துது. ஒரு நாள் அந்தப் பெண் ஆற்றிற்கு தண்ணீர் கொண்டுவரச் சென்றாள். அப்போது  அவளது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அதனால் கீரிப்பிள்ளையைக் காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் ஒரு நல்ல பாம்பு வீட்டிற்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் கீரிப்பிள்ளை பாம்மை பாம்பை பார்த்து விட்டது. கீரி, பாம்புடன் சண்டை போட்டு  அந்த பாம்பை கடித்து கொன்றுவிட்டது. பின்பு கீரி வீட்டின் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தது. அப்போது தண்ணீர்க்குடத்தோடு வீட்டிற்கு திரும்பி வந்த அந்த பெண் வீட்டின் வாசலில் கீரி தன் வாயில் இரத்தத்தோடு நிற்பதைக் கண்டாள். 
தன் குழந்தையை கீரி கடித்துக் கொன்று விட்டதோ என்று நினைத்து, அவசரப்பட்டு தண்ணீர் குடுத்தை கீரிப்பிள்ளையின் மீது போட்டு கொன்றுவிட்டாள். அப்போது வீட்டடிற்குள் திடீரென குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கவே, தாய் உள்ளே சென்று பார்க்கும் பொழுது தொட்டிலில் குழந்தை உயிரோடு இருப்பதையும் அருகில் நல்ல பாம்பு ஒன்று இறந்து கிடந்ததையும் கண்டாள். “அவசரப்பட்டு என் நன்றியுள்ள கீரிப்பிள்ளையை கொன்று விட்டேன என்று அழுது கண்ணீர் வடித்தாள்.”

நீதி - ஒருவனுக்கு அவசமும் கோபமும் அறவே கூடாது

File Size 12.9 MB 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post