current affairs and gk daily 10-1-2020

current affairs and gk notes for all tnpsc exams and all competitive exams.
this current affairs very useful for tnpsc group-I, Group-II, Group-IV, Police exams etc...


6. BSNL என்பது தொலை தொடர்பு நிறுவனம் அல்ல; அது, இந்தியாவின் மிகப்பெரிய சொத்து,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.


5.இந்தியாவில் 2019 ம் ஆண்டு 4196 மணி நேரம் இன்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதால் 1.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9246.8 கோடி) அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய தொழிற்நுட்ப ஆய்வு நிறுவனமான டாப்10 விபிஎன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

4. முப்படைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் தலைமை தளபதியாக, ராணுவத் தளபதியாக இருந்த, ஜெனரல் பிபின் ராவத், ஜன.,01ல் பதவியேற்றார். இந்த பதவிக்கான ஓய்வு வயது, 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறி உள்ளது. அடுத்து, சென்ட் சபையிலும் இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், டிரம்பின் போர் பிரகடன அதிகாரம் பறிக்கப்படும்.

2. 2020-2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்., 1 ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.


1. எஸ்.எஸ்.ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு - கன்னியாகுமரி சோதனைச்சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ., வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.




Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post