current affairs and gk daily 18-1-2020

current affairs and gk daily 18-1-2020





8. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

7. இந்தியாவும், சீனாவும் 3,488 கிமீ எல்லையை கொண்டுள்ளன. மேலும், உலகத்திலேயே இருநாடுகளும் 9வது மிக நீளமான எல்லையை கொண்டுள்ளன.

6. புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க பத்திரிக்கையாளர்களான பிலிப் ராக்கர், கரோல் டி லியோனிங் ஆகியோர், “மிகவும் நிலையான மேதை” என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். அதில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் 3 ஆண்டுகளில் அவரது குழப்பம் நிறைந்த பேச்சுக்கள், அறியாமை தொடர்பான சுவாரசியமான சம்பவங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.

5. இந்திய-சீனா இடையே எல்லை உண்டா?: மோடியிடம் கேட்ட டிரம்ப்

4. ஐசிசியின், கடந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

3.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

2.அமெரிக்காவில், ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர், ஹிந்தி மொழியில் பேசுவதாக, மூத்த இந்திய துாதர் அமித் குமார் தெரிவித்தார்.

1.நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதராக இருந்த ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதலையை தன் வசம் வைத்திருந்தவர் நேபாளத்தை சேர்ந்த 27 வயதான ககேந்திர தபா மகர். 1992 ஆண்டு அக்.,14ல் பிறந்த மகர், 2010ம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். அப்போது அவரது உயரம், 67.08 செ.மீ.,; எடை 6 கிலோ மட்டுமே. கடந்த ஆண்டு பிலிபைன்சின் ஜூன்ரேவிடம்(59.93செ.மீ., உயரம், 5 கிலோ), உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற பட்டத்தை தபா மகர் இழந்தார்.
shortest_man,Khagendra,dies,KhagendraThapaMagar,GuinnessWorldRecord,GuinnessRecord

Post Navi

Post a Comment

0 Comments