current affairs and gk daily 19-1-2020


9. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநி அரசுக்கு பிரச்னைகள் வரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

8. இந்தியாவில் கடந்த ஓராண்டில் (2018) 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளது.

7.தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது.

6. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

5. சீனாவை அச்சுறுத்தும் 'கொரனோ வைரஸ்' எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில் வெளிநாடு சென்று திரும்பும் பயணியரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

4. சமூக கடமைகள் பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என, நாக்பூரில் நடந்த, பல்கலை பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.

3. சரக்கு ரயிலில், 'புக்' செய்த பொருட்கள் தாமதமாக வந்தால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், சூசகமாக தெரிவித்துள்ளார்.

2.குடியுரிமை திருத்த சட்டம், மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அதை, மாநில அரசுகள் அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை,'' என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

1. டில்லியில் தற்போதைய உறுப்பினர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அமர கூடிய வகையில், பார்லி வளாகம் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய பார்லி கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post