current affairs and gk daily 28-1-2020



tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil







8.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

7. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில கவர்னராக, ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றதிலிருந்தே, பல விவகாரங்களில், கவர்னர் - முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரையொருவர், பகிரங்கமாக விமரிசித்து வருகின்றனர்.

6. உ.பி.,யில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல் சிவ் பிரதாப் சிங் கூறியதாவது: உ.பி., மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், 'ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்' என அழைக்கப்படும். பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும்.


5. வங்கிக் கடனுக்கு ஈடாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

2. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்னையில் பணியை துவக்கிய டாக்டர் ரவி கண்ணன், தற்போது அசாமின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில், புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். சேவையைப் பாராட்டி டாக்டர் ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

1. அமெரிக்காவின் இந்திய தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மூத்த அதிகாரியும் இலங்கையின் இந்திய தூதருமான தரன்ஜித் சிங் சந்து, அமெரிக்காவின் இந்திய தூதராக நியமிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர் 1988ம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாக இருந்துள்ளார். 2005ம் ஆண்டு ஜூலை முதல் 2009 பிப்ரவரி வரை, தரன்ஜித் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர், 2013 ஜூலை முதல் 2017 ஜனவரி வரை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post