current affairs and gk daily 8-1-2020
current affairs and gk notes for all tnpsc exams and all competitive exams
2. தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக, 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.
3. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது.
4. அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
5. தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு வரும், பிப்., 8ல் தேர்தல் நடக்க உள்ளது; 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதை, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்ததையடுத்து தலைநகர் டில்லியில் தேர்தல் பிரசாரத்திற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.
6.விமான பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் இனிப்பிற்கு மாற்றாக இனி, தேன் வழங்க வலியுறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.புனேயில் மத்திய தேனி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
7. நிர்பயா வழக்கில் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.
8. குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று(7-1-2020) கோலாகலமாக துவங்கியது. சபர்பமதி ஆற்றங்கரையில் துவங்கிய இந்த திருவிழாவை அம்மாநில பா.ஜ, முதல்வர் விஜய் ரூபானி துவக்கி வைத்தார்.
9. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
10. ஜனவரி 25ம் தேதி வாக்காளர் தினம்
0 Comments
Thanks for your comment