current affairs and gk daily 9-1-2020

current affairs and gk daily 9-1-2020

current affairs and gk notes for all tnpsc exams and all competitive exams.
this current affairs very useful for tnpsc group-I, Group-II, Group-IV, Police exams etc...




1. 16-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாட்டு தூதர்கள் கொண்ட குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது

2. 2. தற்போது ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் - முர்மு ஆவார்.

3. 2020-2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்.,1 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

4.ஈராக்கின் தலைநகர் - பாக்தாத்


5. காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ( ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்.) 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின்உயரம் 359 மீட்டர் ஆகும்.

6. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய 3000 பேர் மீதான தேசத்துரோக வழக்கை கைவிட மாநில நிர்வாகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

7. 2019-20 ம் நிதியாண்டில் 5 சதவீதமாக குறைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2020-21 ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

8. ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ( MQ 9 Reeper) ரக ஆளில்லா விமானத்தை வாங்கும் இந்தியாவின் நீண்ட நாள் முயற்சி விரைவில் கைகூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments