கல்லூரிகளில் அழகு போட்டி வழக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

கல்லூரிகளில், அழகு போட்டிக்கு தடை விதித்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத, மாணவர்கள் சங்கம் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு, அபராதம் விதிப்பது மட்டுமின்றி, ’பிடிவாரன்ட்’டும் பிறப்பிக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில், 2013ல், Engineering College மாணவ, மாணவியருக்கான அழகு போட்டி நடத்தப்பட்டது. இதில், அக் ஷயா என்ற மாணவி வெற்றி பெற்றார். அறிவித்தபடி, அவருக்கு பரிசு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவியின் தாய், லட்சுமி சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.
மனுவை, நீதிபதி, சிவஞானம் விசாரித்து, இடைக்கால உத்தரவை, 2015 பிப்ரவரியில் பிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும், மாணவர்கள் மத்தியில் அழகுப் போட்டி நடத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அண்ணா பல்கலை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ’மாணவர்கள் மத்தியில் அழகுப் போட்டி நடத்த, அனுமதி எதுவும் வழங்கவில்லை’ என, கூறப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி, வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது.
”மார்ச், 19ம் தேதிக்குள், மாணவர்கள் சங்கத்தின் தலைவர், விக்னேஷ்; நிகழ்ச்சி பொறுப்பாளர் மற்றும் அமைப்பாளர், சுதர்சன், பிரபாகரன் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். ”இல்லையென்றால், 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதிப்பதுடன், பிடிவாரன்டும் பிறப்பிக்கப்படும்,” என, நீதிபதி, வைத்தியநாதன் எச்சரித்தார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post