தேவையற்ற அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைப்பு / Group system to reduce unwanted state workplaces
சென்னை: தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிந்து குறைப்பது குறித்து பரிந்துரைக்க அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக அரசு பணியிடங்களில் தேவையற்றது என்னென்ன என்பதை கண்டறிய குழு அமைக்கப் பட்டுள்ளது. முன்னாள் முதன்மை செயலாளர் ஆதிசேஷைய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து குறைக்கவும், எந்தெந்த பணியிடங்களை அவுட் சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment