மத்திய பல்கலைகளில் அட்மிஷன்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற ‘சென்ட்ரல் யுனிவர்சிட்டிஸ் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ (கியுசெட்) எனும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம்!
மத்திய பல்கலைக்கழகங்கள்
தமிழகம், அரியானா, ஜார்கண்ட், ஜம்மு, கர்நாடகா, காஷ்மீர், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய 10 இடங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. ‘கியுசெட்’ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே, அனைத்து மத்திய பல்கலைக்கழகத்திற்குமான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
திருவாரூரில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.பீ.ஏ.,-இசை, பி.எஸ்சி.,-ரெக்ஸ்டைல்ஸ், பி.எஸ்சி.பி.எட்.,-கணிதம் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளும், எம்.ஏ., - தமிழ், பொருளியல், ஆங்கிலம், இந்தி, வரலாறு, மாஸ் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி., -  அப்ளைடு சைக்காலஜி, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எபிடெமியாலஜி அன்ட் பப்ளிக் ஹெல்த், ஜியோகிரபி, மைக்ரோபயாலஜி, எம்.டெக்.,-மெட்டீரியல் சயின்ஸ், எம்.பி.ஏ., மாஸ்டர் ஆப் சோசியல் வொர்க் உள்ளிட்ட ஏராளமான முதுநிலை பட்டப்படிப்புகளும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை போன்று, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு படிப்புகள் உள்ளன.
தேர்வு முறை: இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகள் என நிலைக்கு ஏற்ப தனித்தனி நுழைவுத்தேர்வு உண்டு. அனைத்து படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து ‘மெரிட்’ அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 28 மற்றும் 29.
விபரங்களுக்கு: www.cucetexam.in , https://cutn.ac.in/

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post