நடிக்க கற்கலாம்



மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ், தன்னாட்சி கல்வி நிறுவனமாக புதுடில்லியில் செயல்படும், என்.எஸ்.டி., எனும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்பு: டிப்ளமா இன் டிராமாடிக் ஆர்ட்ஸ் - 3 ஆண்டுகள்
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.
சேர்க்கை முறை: மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
முதல்நிலை - செயல்முறை தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
இரண்டாம் நிலை - ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்விரு நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்ப்படுவர்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 16
சென்னையில் தேர்வு நடைபெறும் நாள்: மே 22
விபரங்களுக்கு: https://nsd.gov.in

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post