ஐதராபாத் நகரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், 69 பேருக்கு, சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனவரியில் நடந்த சாலை விபத்தில், சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். &'வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்&' என, சட்டம் உள்ளது.

இந்நிலையில், வாகனங்கள் ஓட்டும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். ஒரு மாதத்தில் மட்டும், கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டிய, 69 சிறுவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தந்தையரை, நீதிமன்றம் வரவழைத்தனர்.

சிறுவர்களுக்கு அபராதம் விதிக்காமல், சட்ட விரோதமாக அவர்கள் வாகனம் ஓட்ட காரணமாக இருந்த, அவர்களது தந்தையருக்கு, மூன்று நாட்கள் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post