புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ் கிளார்க் வேலை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உளள 115 செவிலியர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண்.Admn-1/DR/1(1)/2016
பணி: Nursing Officer
காலியிடங்கள்: 91 (UR-56, OBC-17,SC-7, ST-11) 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk 
காலியிடங்கள்: 24 இடங்கள் (UR-14, OBC-7, SC-2,ST-1).
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200. 
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: புதுச்சேரி, திருவனந்தபுரம், சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை. 
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 30.05.2018 தேதிக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ரூ.1500. (எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1Iobf_lDr5-6cpAQq8cC0OPRL2rNDf2Bi/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post