10, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்



                                                                 
                                                         பிளஸ்2 வகுப்பு, பத்தாம் வகுப்புகளுக்கு
நடத்தப்பட்ட சிறப்பு துணைத் தேர்வுகளை எழுதிய மாணவ மாணவியருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண்  பட்டியல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான  தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைப்  பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
பிளஸ் 2 சிறப்பு தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதியில் இருந்தும், பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்  தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 
இந்நிலையில், இப்போது மேனிலைத் தேர்வு எழுதிய (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய(மறுகூட்டல் உள்பட) மாணவர்களும் தங்கள் அசல் மதிப்பெண் சான்றுகளை நாளை முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்  கொள்ளலாம்.  
இதில் நிரந்தர பதிவெண் கொண்ட மாணவர்கள், இதற்கு முன்னெழுதிய தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜூன், ஜூலை சிறப்பு துணைப் பொதுத் தேர்வு  எழுதி அனைத்துப் பாடங்களிலும் பெற்றிருந்தால், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றுகளும், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி  பெறாதவர்களுக்கு அந்தந்த பாடங்களுக்கு உரிய மதிப்பெண் சான்றுகளும் வழங்கப்படும்.                           
                                                   

    

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post