தமிழகத்தில் அடுத்துவரும் 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அக்டோபர் 8-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் 13 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Thanks for your comment