அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு





அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழைபெய்யும், தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் அதிகமழையும், பகல் நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில் காற்று சுழற்சி வடக்கு தமிழகம் நோக்கி நகர்ந்து செலவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தமிழகம் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி,ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 
Post Navi

Post a Comment

0 Comments