சேர்க்கைக் கட்டணம்: கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை




உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், அவர்களது சேர்க்கையை திரும்ப பெறும் போது சேர்க்கையின் போது பெறப்பட்ட முழு கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் திரும்ப அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத் தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களது சேர்க்கையை திரும்ப பெற்று விடுகின்றனர். அந்த சமயங்களில் , பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுக்களின் விதிமுறைப்படி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகை மற்றும் கல்வி ஆவணங்களை  திரும்ப செலுத்த வேண்டும். ஆனால் சில கல்வி நிறுவனங்கள், கட்டணத்தை அவ்வாறு திருப்பித் தருவதில்லை என்றும், திருப்பித் தரும் நிறுவனங்கள் கட்டணத்தை பிடித்துக் கொண்டு குறைந்த தொகையை மட்டும் திருப்பித் தருவதாகவும் அமைச்சகத்துக்கு புகார்கள் வருகின்றன. அவ்வாறு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை மீறும் கல்வி நிறுவனங்களின் உரிமம் திரும்பப் பெறப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post