இலவசமாக Download செய்ய Email Id ஐ பதிவு செய்யவும்!

SEND YOUR QUESTIONS AND STUDY MATERIALS TO tnschools.in@gmail.com

Jan 4, 2019

கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மசோதா நிறைவேறியதுமுதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்துகட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மட்டும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது: &'கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும்&' என, ௨௫ மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. கட்டாய தேர்ச்சி முறையை தொடரலாமா, வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரம், இந்த மசோதா மூலம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Thanks for your comment

Pages

Total Pageviews

Popular Posts

Follow Me

tnschools facebook group

 
Tnschools.co.in Group
Public group · 200049 members
Join Group