current affairs and gk daily 4-1-2020


1இந்திய ராணுவத்தின் 28 ஆவது தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.இதனிடையே, முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பதவியேற்றுள்ள பிபின் ராவத்தை திறமைவாய்ந்த அதிகாரி ((Outstanding Officer )) என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

2.இந்தியாவைச் சேர்ந்த முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சீமா, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

3.2019-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து 96 லட்சத்து 69 ஆயிரத்து 633 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இந்தியர்கள், 15 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

5. பாகிஸ்தானில் ,நங்கானா சாஹிப் என்ற இடத்தில் உள்ள குருத்வாராவில் சீக்கிய மத நிறுவனரான குருநானக் பிறந்தார். இந்த இடம் சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. 

6.மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் 

7.மூத்த எழுத்தாளா் பரணீதரன் (95) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராயநகரில் வெள்ளிக்கிழமை (95) 3-1-2020 காலமானாா்.
மெரீனா என்கிற பெயரில் இவா் எழுதிய ‘தனிக்குடித்தனம்’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘மகாத்மாவின் மனைவி’, ‘கஸ்தூரி திலகம்’ போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடை நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன. காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆா்.கே. நாராயணின் ‘கைட்’, ‘ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்’ நாவல்களையும் தமிழில் மொழிபெயா்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். ‘அருணாசல மகிமை’ என்கிற ஆன்மிகத் தொடா் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும்.

8குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post