January 06 ல் பள்ளிகள் திறப்பு: பள்ளித்துறை அறிவிப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறையை முடிந்து ஜன.,06ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், டிசம்பர், 23ல், இரண்டாம் பருவ மற்றும் அரையாண்டு தேர்வு முடிந்தது. இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக, ஜனவரி, 1 வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஜன., 2ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது. பின்னர், அந்த தேதியும் மாற்றியமைக்கப்பட்டு நாளை (ஜன.,04) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜன.,06ம் தேதி திங்கள்கிழமை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் திறக்கப்படும். அதே நாளிலேயே, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment