பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்

பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இம்மாதம் நடக்கஉள்ள பொதுத்தேர்வின் போது, ஒவ்வொரு தேர்வறையிலும், 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் 10ம் வகுப்பு தேர்வுக்கு, 12 ஆயிரத்து, 690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவற்றில், 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவர் பிளஸ் 1 தேர்வுக்கான, 7,400 தேர்வு மையங்களில், 8.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மார்ச், 24ல் தேர்வு எழுதாத, 36 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் இந்த தேர்வு பணிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் மற்றும், 1.66 லட்சம் பணியாளர் கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என, அனைவருக்கும், 46.37 லட்சம் மறு பயன்பாட்டு, முக கவசங்கள் வழங்கப்படும் தேர்வு எழுத வரும் வெளி மாநில, மாவட்ட மாணவர்களுக்கு, தனிமைப்படுத்துதலில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் மாணவர் விடுதிகள், வரும், 11 முதல் தேர்வு முடியும் வரை திறந்திருக்கும். இந்த தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு, 'இ - பாஸ்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அனைத்து தேர்வு மையங்களிலும், கைகழுவும் சோப்பு மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள், பங்கேற்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


latest tamil news




10ம் வகுப்பு பொது தேர்வுக்குஇன்று, 'ஹால் டிக்கெட்' வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன், 15 முதல், 25ம் தேதி வரை நடக்க உள்ளது. ஜூன், 16ல், பிளஸ் 1 தேர்வு; ஜூன், 18ல் பிளஸ் 2 தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியிடப்படுகிறது.தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் பேசி, தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, ஹால் டிக்கெட்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post