இந்தியா அமைவிடம் -நிலத்தோற்றம் முக்கியமான வினா விடைகள்

 1. ஷராவதி நதியின் ஜோக் நீர்வீழ்ச்சி எந்த மலைத்தொடரில் அமைந்தள்ளது - மேற்குத்தொடர்ச்சி மலை
 2. இந்தியாவின் அட்சரேகைப் பரவல் என்ன -  8°4' to 37°6'
 3. இந்தியாவின் மேற்கு முனை -குஹார்மோத்தி
 4. இந்தியாவின் வடக்கு முனை - இந்திராகோல்
 5. இந்தியாவின் தெற்கு முனை - இந்திரா முனை
 6. இந்தியாவின் திட்டநேரமான 82°30' கிழக்கு தீர்க்கம் எந்த இடத்தின் வழியாகச் செல்கிறது? - அலகாபாத்
 7. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் - K2 (காட்வின் ஆஸ்டின்)
 8. இந்தியாவின் மிகஉயர்ந்த பீடபூமி- லடாக் பீடபூமி
 9. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள மத்திய இமயமலைத்தொடர் பகுதியை எவ்வாறு அழைப்பர் - ஹிமாத்திரி
 10. ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ள ராஜஸ்தான் சமவெளியின்  முக்கிய ஆறு எது? -லூனி ஆறு
 11. திபெத்தில் உருவாகும் “சாங்கோ” நதி இந்தியாவில் எந்தப் பெயருடன் பாய்ந்தோடுகின்றது? - பிரம்மபுத்ரா
 12. தீபகற்ப பீடபூமியை இருசமமற்ற பகுதிகளாகப் பிரிக்கும் நதி எது? - நர்மதை
 13. உலகின் மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது? -ஆரவல்லி மலைத்தொடர் 
 14. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த சிகரம் எது? -மகேந்திரகிரி 
 15. இலட்சத்தீவுகள் ____________ல் ஆனவை - பவளப்பாறைகள்
 16. இந்தியாவில் உற்பத்தியாகும் மிக நீளமான நதி - சிந்து
 17. உலக அளவில் இரும்புத்தாது இருப்பில் இந்தியாவின் இடம் -2வது இடம்
 18. உலக மைக்கா உற்பத்தியில் இந்தியாவின் பங்கு -60%
 19. வரலாற்றுக் காலத்தில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது - பாரதம், இந்துஸ்தான்
 20. ஆசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது நாடு - இந்தியா
 21. இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8848மீ
 22. உலகிலேயே மிக உயர்ந்த மலையான இமயமலையை எவ்வாறு அழைப்பர் - பனி உறைவிடம்
 23. இமயமலைகள் 2500 கி.மீ. நீளத்திற்கு மேற்கு கிழக்காக, எந்த வடிவத்தில் அமைந்துள்ளன - வில்
 24. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு புவியானது, ஒரே நிலப்பகுதியாக இருந்ததை எவ்வாறு அழைக்கப்பட்டது - பாஞ்சியா
 25. உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் எது - காட்வின் ஆஸ்டின்
 26. இந்தியாவிலுள்ள மிக உயர்ந்த பீடபூமியான லடாக் பீடபூமி எங்கு அமைந்துள்ளது - வடமேற்கு காஷ்மீர்
 27. இமயமலையின் வடக்கு மலைத்தொடரை .................. என்கிறோம் - ஹிமாத்ரி
 28. ஹிமாத்ரி மலையின் சராசரி உயரம் - 6000 மீ
 29. ஹிமாத்திரி மலையிலுள்ள முக்கிய கணவாய் எது - நாதுலா, ஜலப்புலா
 30. டூன் பள்ளத்தாக்கு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன - சிவாலிக் மலைத்தொடர்
 31. இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள இமயமலை எவ்வாறு அழைக்கப்பட்டது - பூர்வாச்சல்
 32. இமயமலை அடிவாரத்தில் காணப்படும் சேறும், சகதியும் கொண்ட நிலப்பகுதி எது - தராய்
 33. ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ள சமவெளி எது - ராஜஸ்தான் சமவெளி
 34. இந்திய அளவில் பெட்ரோலிய உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது - மும்பை ஹை
 35. இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் (1897) எங்கு அமைக்கப்பட்டது - டார்ஜிலிங்
 36. இந்திய அளவில் கரும்பு உற்பத்தியில் மதலிடம் வகிப்பது - உத்திரப்பிரதேசம்
 37. இந்திய அளவில் காப்பி உற்பத்தியில் மதலிடம் வகிப்பது - கர்நாடகம்
 38. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி - வுலர் ஏரி

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post