10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்: தேதி அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பினை அரசுத் தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 16ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் கால 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments
Thanks for your comment