பள்ளி மாணவர்களுக்கு TCS நடத்தும் வினாடி வினா போட்டி

பள்ளி மாணவர்களுக்கு TCS நடத்தும் வினாடி வினா போட்டி


முன்னணி ஐ.டி., தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நாடு முழுவதிலும் உள்ள சென்னை உட்பட 12 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவிற்கு இரண்டு மாணவர்கள் வீதம் பள்ளி நிறுவனம் எத்தனைக் குழுக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் என்று ஏதும் இல்லை.
சென்னையில் இந்த கேள்வி பதில் போட்டி ஆகஸ்ட் 21ம் தேதி டி.டி.கே., சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 14. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ பதிவு செய்யலாம்.
போட்டி முறை: 
விண்ணப்பித்த அனைவருக்கும் முதலில் எழுத்து வடிவில் கேள்வி பதில் போட்டி நடைபெறும், இதில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் ஆறு இடத்தைப் பிடிக்கும் மாணவர்கள் மட்டுமே பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் போட்டியிடுவர். சென்னை வட்டத்தில் வெற்றி பெறும் மாணவர் குழு தேசிய அளவிலான இறுதி போட்டிக்கும் தகுதி பெறும்.
பரிசுகள்:
சென்னை அளவில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசாக ரூ.60,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் வழங்கப்படும், அதே போல் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.40,000 பதிப்புள்ள கிப்ட் வவுச்சர் வழங்கப்படும். இது தவிர கோப்பை மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும். இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஆறு குழுக்களுக்கும் ஜிம் பேக், மல்ட்டிபங்ஷ்னல் மியூசிக் டார்ச் வித் புளூடூத் ஸ்பீக்கர்ஸ் மற்றும் TCS.,50 பென்டிரைவ்களும் வழங்கப்படும்.
கேள்விகள்:
போட்டிக்கான கேள்விகள் பெரும்பாலும் சுற்றுச்சூழல், வணிகம், மக்கள், தலைவர்கள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்தே இருக்கும். குறிப்பாக ஐ.டி., துறையின் வளர்ச்சி பற்றி கேட்கப்படும், குறிப்பாகக் கல்வி, பொழுதுபோக்கு, புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டு, சமூக வலைத்தளங்களில் ஐ.டி., துறையின் பங்களிப்புகள் என்ன என்பவை. இந்த துறையில் தடம் பதித்த நிர்வாகிகள் மற்றும் நிறுவனங்கள், அவற்றின் வரலாறுகள் ஆகியவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவு செய்யவும், போட்டி குறித்த மேலும் விபரங்களைப் புரிந்து கொள்ளவும் www.tcsitwiz.com என்கிற வலைத்தளத்தில் பார்க்கலாம்.
Post Navi

Post a Comment

0 Comments