பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்
பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் . பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் காகிதத்தால் ஆன கொடியை போன்று சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல. பிளாஸ்டிக்கால் ஆன தேசியக்கொடியை பயன்படுத்துவது நாட்டின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகும். ஆதலால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மக்கள் பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடியை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment