சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புவனேஸ்வர் அருகே தென்கிழக்கே சுமார் 30 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, வால்பாறையில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், நெல்லையில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
0 Comments
Thanks for your comment