ஒரே நாளில் TNPSC, வனத்துறை தேர்வுகள் - குழப்பத்தில் தேர்வர்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வும், வனத்துறை
போட்டி தேர்வும் ஒரே நாளில் நடைபெறுவதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.டிஎன்பிஸ்சி சார்பில் கால்நடைத்துறையில் புள்ளியியல் ஆய்வாளர் நியமனத்துக்கான போட்டித் தேர்வு வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் வனத்துறை சார்ந்த மூன்று பணிகளுக்கான போட்டித் தேர்வுகளும் நடைபெறுகின்றன.இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 5ஆம் தேதி வரை உள்ள நிலையில், இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் எந்த தேர்வில் பங்கேற்பது என தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர் வனத்துறை தேர்வு தேதி தற்காலிகமானது என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை மாற்று தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே, வனத்துறை தேர்வுக்கு கால அவகாசம் வழங்கி, தள்ளி வைக்குமாறு கேரிக்கை வைக்கப்பட்டுள்ளது
0 Comments
Thanks for your comment