Kinds of Sentences: வாக்கியங்களின் வகைகள்:

1. Declarative (or) Assertive Sentence: (செய்தி வாக்கியம்)
   A sentence that makes a statement or assertion is called a Declarative or Assertive Sentence.
ஒரு தகவலை அல்லது ஒரு விஷயத்தை உறுதியாகக் கூறும் வாக்கியம் செய்தி வாக்கியம் என்றழைக்கப்படுகிறது.


Statement Sentence:

The structure of a Statement
A statement always being with a subject followed by verb. Other words will follow the verb. And we find full stop at the end of the sentence.
Statement வாக்கியம் எப்பொழுதும் எழுவாயுடன் (Subject) தொடங்கும். எழுவாயைத் தொடர்ந்து வினைச்சொல் (Verb) வர வேண்டும். மற்ற வார்த்தைகள் பின் வரும். இறுதியில் ஒரு முற்றுப்புள்ளி இருக்கும்.

Examples: 

1. I get up at 6 o' clock in the morning daily. - நான் தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கிறேன்.
2. The students are plying in the ground - மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
3. Mumbai is the biggest city in India - மும்பை இந்தியாவில் மிகப்பெரிய நகரமாகும்.
4. Islamabad is the capital of Pakistan - இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் தலைநகரம்.
5. Nature is the best physician - இயற்கை சிறந்த மருத்துவர்.
6. She has a good memory - அவளிடம் சிறந்த நினைவாற்றல் இருக்கிறது.
7. Madurai is a temple city - மதுரை ஒரு கோவில் நகரம்.
8. This flower is very beautiful - இந்த மலர் மிக அழகாக இருக்கிறது.
9. Iron and Copper are useful metals. -இரும்பும் செம்பும் பயனுள்ள உலோகங்கள் ஆகும்.
10. Akbar was a great king. - அக்பர் ஒரு மாமன்னர்.
11. I have enough money - என்னிடம் போதிய பணம் இருக்கிறது. ( I have - என்னிடம் , Money -பணம், )
12. He still studies in that college. - இவன் இன்னமும் அந்தக் கல்லூரியில் படிக்கின்றான். (still- இன்னும், College - கல்லூரி)
13. My uncle lives in Chennai - என்னுடைய மாமா சென்னையில் வசிக்கிறார். ( lives- வசித்தல்)
14. These fruits are sour - இந்தப் பழங்கள் புளிப்பாக இருக்கின்றன.
15. She sang a sweet song - அவள் ஒரு இனிமையான பாடலைப் பாடினாள்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post